யாழ்ப்பாணக் கல்லூரிக்கு
மகோன்னத வெற்றி.

HURRAH! HURRAH! FOR JAFFNA COLLEGE
CONGRATULATIONS JAFFNA COLLEGE

ராஜன் கதிர்காமர் வெற்றிக்கிண்ணத்தை வென்று அசத்தியுள்ளது யாழ்ப்பாணக் கல்லூரி.
சென்.பற்றிக்ஸ் கல்லூரிக்கெதிரான இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய யாழ்ப்பாணக் கல்லூரி 163 ஓட்டங்களைப் பெற்றது. சென்பற்றிக்ஸ் கல்லூரி 115ஓட்டங்களுக்கு சகல விக்கெற்றுகளையும் இழக்க யாழ்ப்பாணக் கல்லூரி 48 ஓட்டங்களால் மகத்தான வெற்றியீட்டியுள்ளது. 14 வருடங்களின் பின்னர் ராஜன் கதிர்காமர் கிண்ணத்தை யாழ்ப்பாணக் கல்லூரி கைப்பற்றியுள்ளமை மட்டற்ற மகிழ்ச்சியளிக்கின்றது. மகத்தான வெற்றியீட்டியுள்ள நி.விஷ்ணுகாந் தலைமையிலான யாழ்ப்பாணக் கல்லூரி கிரிக்கெற் அணி வீரர்களுக்கும் பயிற்றுவிப்பாளர்களுக்கும் யாழ்ப்பாணக் கல்லூரி பழைய மாணவர்களின் இதயங்கள் இனிக்கும் நல்வாழ்த்துக்கள்.

 

  • Date 19/09/2022 - 22/09/2022
  • Time 09:00 - 00:00